search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை"

    ஆரம்ப சுகாதார மையங்களில் அவசர மருத்துவ வசதிகள் சரிவர இல்லாத காரணத்தினால் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கில் சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடங்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. #AmbulanceServiceForInfants
    அகமதாபாத் :

    ’பிறக்கும் குழந்தைகளுக்கு என மருத்துவமனைகளுக்கு இடையிலான ஆம்புலன்ஸ் சேவை திட்டம்’ எனும் பெயரில் குஜராத்  மாநிலம் முழுதும் முதல்கட்டமாக அனைத்து சிறப்பு வசதிகளையும் கொண்ட10 ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் குறித்து  குஜராத் மாநில சுகாதார ஆணையர் டாக்டர் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளதாவது :-

    பல பச்சிளங்குழந்தைகள் ஜாம்நகர் மாவட்ட சிவில் மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது. இவ்வாறு, பிறந்த குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு இடையே அழைத்து செல்ல அதிக நேரம் விரயம் ஆவதால் அகமதாபாத் மருத்துவமனையை அடைவதற்குள்ளாகவே பல குழந்தைகள் இறக்க நேரிட்டது.

    எனவே, ஜாம்நகர் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஒரு யோசனையை முன்வைத்தார் அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜாம்நகர் சிவில் மருத்துவமனைக்கு மட்டும் சோதனை முயற்சியாக  சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

    இதன் மூலம் 43 பச்சிளங்குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது. எனவே இத்திட்டத்தை விரிவு படுத்தும் பொருட்டு ‘பிறக்கும் குழந்தைகளுக்கு என மருத்துவமனைகளுக்கு இடையிலான ஆம்புலன்ஸ் சேவை திட்டம்’ எனும் பெயரில்  மாநிலம் முழுதும் முதல்கட்டமாக அனைத்து சிறப்பு வசதிகளையும் கொண்ட10 ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    அவசர சிகிச்சைகள் தேவைப்படும் பச்சிளங்குழந்தைகளுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து இந்த ஆம்புலன்ஸ் சேவை செயல்படும். இதில், குழந்தைகளின் முதலுதவிக்கு தேவையான அனைத்து சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். #AmbulanceServiceForInfants
    ×